UPDATED : நவ 14, 2026 05:21 AM
ADDED : நவ 14, 2026 04:39 AM

அரூர்; அரூரில், நெரிசலை சரி செய்ய, போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும்.
தர்மபுரி மாவட்டம், அரூர் கச்சேரிமேட்டில், தர்மபுரி - திருப்பத்துார் - சேலம் - அரூர் நகருக்குள் செல்லும் வழி என, நான்குசாலை சந்திப்பு உள்ளது. இவ்வழியாக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் லாரிகள், கனரக வானங்கள், பஸ், வேன், லாரி மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரி வாகனங்கள் செல்கின்றன. இதனால், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் சிறிய அளவிலான விபத்து ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. அதே போல், நான்குரோடு, பஸ் ஸ்டாண்ட், நடேசா பெட்ரோல் பங்க் ஆகிய இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.அரூரில் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் துவங்கப்பட்டு, போலீசார் நியமனம் செய்யப்பட்ட போதிலும், சில நேரங்களில் மட்டும் பெயரளவிற்கு போலீசார் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுகின்றனர். மேலும், பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கேற்ப போலீசார் இல்லாததை பயன்படுத்தி, வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறி செல்கின்றனர்.
எனவே, போக்குவரத்து நெரிசலை குறைக்க, முக்கிய இடங்களில் சிக்னல் அமைக்கவும், போலீசாரை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
