தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/தாராபுரத்தில் உணவகம், பேக்கரிகளில் ஆய்வு

தாராபுரத்தில் உணவகம், பேக்கரிகளில் ஆய்வு

தாராபுரத்தில் உணவகம், பேக்கரிகளில் ஆய்வு


ADDED : பிப் 15, 2024 11:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2024 11:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாராபுரம்: தாராபுரம், புது பஸ் ஸ்டாண்ட், கடைவீதி பகுதிகளில் உள்ள உணவகங்கள், பேக்கரிகளில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை மற்றும் ஆய்வாளர்கள் சிரஞ்சீவி, ரகுநாதன் உள்பட ஐந்து பேர் கொண்ட குழுவினர், நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் இரு கடைகளில் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து கடை உரிமையாளர்களுக்கு தலா, 2,000 ரூபாய் மற்றும் சுகாதாரமற்ற முறையில் இருந்த ஒரு கடைக்கு, 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

ஆய்வு நடைபெற்ற, 19 கடைகளில் இருந்து முழு விபரம் இல்லாத, 86 கிலோ உணவு பொருட்கள், காலாவதியான இரண்டரை கிலோ உணவு, 1,500 லிட்டர் குளிர்பானம், 300 கிராம் செயற்கை நிறமூட்டி ஆகியவை கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. உணவு தொடர்பான புகார்களுக்கு, 94440 42322 என்ற எண்ணில், வாட்ஸ் ஆப் மூலம் தகவல் அளிக்கலாம் என அதிகாரிகள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us