/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
யானை தாக்கி விவசாயி பலி; உறவினர்கள் சாலை மறியல்
/
யானை தாக்கி விவசாயி பலி; உறவினர்கள் சாலை மறியல்
ADDED : செப் 24, 2024 07:07 AM
பாலக்கோடு : தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த செங்கோடப்பட்டியைச் சேர்ந்த விவசாயி துரைசாமி, 68. நிலக்கடலையை பயிரிட்டிருந்ததால், நேற்று முன்தினம் இரவு தோட்டத்தில் காவலில் ஈடுபட்டார். நேற்று அதிகாலை, அங்கு வந்த ஒற்றை ஆண் யானை அவரை தாக்கியதில் பலியானார். ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், துரைசாமியின் சடலத்தை எடுக்க விடாமல், வனத்துறையினரை கண்டித்து, பாலக்கோடு - பெல்ரம்பட்டி சாலை செங்கோடபட்டியில் மறியலில் ஈடுபட்டனர்.
இதே ஒற்றை யானை, தீத்தாரப்பட்டியில் சமீபத்தில் முதியவரை மிதித்து கொன்ற நிலையில், மீண்டும் ஒருவரை கொன்றுள்ளது.
யானை நடமாட்டம் குறித்து தெரிந்தும், அதை காட்டுக்குள் விரட்டாமல், வனத்துறையினர் வேடிக்கை பார்ப்பதால், மனித உயிர்களையும், பயிர்களையும் பாதுகாக்க முடியவில்லை என குற்றஞ்சாட்டினர். பாலக்கோடு போலீசார் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர்.

