/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ராஜகால்வாயில் ஆக்கிரமிப்பு அகற்ற விவசாயிகள் கோரிக்கை
/
ராஜகால்வாயில் ஆக்கிரமிப்பு அகற்ற விவசாயிகள் கோரிக்கை
ராஜகால்வாயில் ஆக்கிரமிப்பு அகற்ற விவசாயிகள் கோரிக்கை
ராஜகால்வாயில் ஆக்கிரமிப்பு அகற்ற விவசாயிகள் கோரிக்கை
ADDED : நவ 17, 2025 03:54 AM
அரூர்: அரூர் பெரிய ஏரி, 160 ஏக்கர் கொண்டது. கடந்த காலங்களில் ஏரி நிரம்பியவுடன், அதிலிருந்து வெளியேறும் உபரி நீர், ராஜ-கால்வாய் வழியாக சென்று, பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள வாணியாற்றில் கலக்கும்.
இந்நிலையில் பல்வேறு இடங்களில் ராஜகால்வாய் ஆக்கிர-மிப்பு செய்யப்பட்டுள்ளதால், மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், அரூர் பெரியார் நகர், பச்சினாம்பட்டி, குபேந்திரன் நகர், கீழ்பாட்சாபேட்டை, மஜீத்தெரு, கடைவீதி உள்ளிட்ட, பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவதுடன் தொற்று நோய் ஏற்படும் நிலையுள்ளது. மேலும், சில இடங்களில் ராஜகால்வாயை ஆக்கிர-மித்து கட்டடங்கள் கட்டப்படுகிறது. எனவே, ராஜகால்வாய் ஆக்கிரமிப்புக்களை அகற்ற, பொதுப்ப-ணித்
துறையினர் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்-துள்ளனர்