/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
குவாரி அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு
/
குவாரி அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு
ADDED : ஜன 27, 2025 02:42 AM
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மோளையானுார் -- மெனசி சாலையில், 10 ஏக்கரில் அரசு கல்குவாரி உள்ளது. இது கடந்த சில ஆண்டுகளாக இயங்காமல் இருந்தது. இதை அரூரை சேர்ந்த தனியார் நிறுவனம் கடந்த, 2020ல் கிரானைட் கற்கள் வெட்டி எடுக்க அரசிடம் அனுமதி பெற்றது.
இதையடுத்து நேற்று அப்பகுதியில் பணிகளை துவங்க பூஜை போட்டு பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு, சாலை மறியலில் ஈடுபட முயற்சித்-தனர். பாப்பிரெட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் வான்மதி, பொம்-மிடி ஆர்.ஐ., விமல் உள்ளிட்ட அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கல்குவாரி ஆரம்பித்தால், சுற்றுவட்டார விவசாயம் முழுமையாக பாதிப்படையும். நிலத்தடி நீர்மட்டம், கால்நடைகள் பாதிப்ப-டையும் என விவசாயிகள் தெரிவித்தனர். இதுகுறித்து உயர் அதி-காரிகளுக்கு தகவல் தெரிவிப்பதாக அதிகாரிகள் கூறியதைய-டுத்து, போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்-றனர்.

