/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
முள்ளங்கி விலை சரிவு விவசாயிகள் வேதனை
/
முள்ளங்கி விலை சரிவு விவசாயிகள் வேதனை
ADDED : ஏப் 07, 2025 02:32 AM
தர்மபுரி: விலை சரிவு காரணமாக, முள்ளங்கி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில், தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், காரிமங்கலம் உள்-ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் முள்ளங்கி பயிர் சாகுபடி செய்-கின்றனர். விதையை நடவு செய்து, ஒன்றரை மாதத்தில் முள்ளங்-கியை அறுவடை செய்ய முடியும். எனவே, குறுகிய காலத்தில் வருமானம் கொடுக்கும் பயிர் என்பதால், முள்ளங்கி சாகுபடி செய்து வருகின்றனர்.
தர்மபுரி மாவட்ட உழவர் சந்தை
களில் நேற்று முன்தினம் ஒரு கிலோ முள்ளங்கி, 14 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் நேற்று, 10 ரூபாய்க்கு விற்பனையானது. விவசாயிகளிடம் இருந்து கிலோ, 2 முதல் 3 ரூபாய்க்கு முள்ளங்-கியை வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். அதேபோல், கடந்த 2 அன்று, 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பீன்ஸ் நேற்று, 60 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால், முள்ளங்கி விவசாயிகள் வேதனையடைந்தனர். ஒரே சமயத்தில், அதிக பரப்பில் முள்ளங்கி சாகுபடி நடந்ததாலும், சந்தைக்கு முள்ளங்கி வரத்து அதிகரித்ததாலும் விலை சரிவடைந்து வருவதாக
வியாபாரிகள் தெரிவித்தனர்.