/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
'உழவரை தேடி உழவர் நலத்துறை' திட்ட முகாம்
/
'உழவரை தேடி உழவர் நலத்துறை' திட்ட முகாம்
ADDED : மே 30, 2025 01:37 AM
காரிமங்கலம் :தமிழக முதல்வர் ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில், வேளாண்மை விரிவாக்க சேவைகளை, விவசாயிகளுக்கு, அவர்களின் கிராமங்களிலேயே வழங்கிடும் வகையில், உழவரை தேடி உழவர் நலத்துறை என்ற திட்டத்தை காணொலி காட்சி வாயிலாக, திருவாரூர் மாவட்டம், வலங்கமைான் தாலுகா, மாணிக்கமங்கலத்தில் துவக்கி வைத்தார்.
இதையடுத்து, தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் தாலுகா, அடிலம் பஞ்.,ல் காணொலி காட்சி வாயிலாக ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில், தர்மபுரி கலெக்டர் சதீஸ், எம்.பி., மணி ஆகியோர் கலந்து கொண்டனர். பின், 10 விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., கவிதா, வேளாண் இணை இயக்குனர் குணசேகரன் மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
* அரூர் அடுத்த கொளகம்பட்டியில் நடந்த திட்ட சிறப்பு முகாமில், அரூர் வேளாண் உதவி இயக்குனர் (பொ) குமார், தலைமை வகித்து பேசினார். உதவி தோட்டக்கலை அலுவலர் கர்ணன், உதவி கால்நடை மருத்துவர் டாக்டர் காந்தி ராஜன், பட்டு வளர்ச்சித் துறை இளநிலை ஆய்வாளர் ரம்யா, மீன்வளத்துறை ஆய்வாளர் கோகிலாவாணி ஆகியோர் தங்கள் துறையில் செயல்படுத்தப் படும் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினர்.
* பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மோளையானுார், எச்.புதுப்பட்டி கிராமங்களில் நடந்த சிறப்பு முகாம், வட்டார உதவி இயக்குனர் அருணன் தலைமையில் நடந்தது. இதில் தோட்டக்கலை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை, உள்ளிட்ட அலுவலர்கள் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர். முகாமில் விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டத்தில் நெல் இயந்திர நடவு மானியம் பெற விண்ணப்பம் பெறப்பட்டது. பின் விவசாயிகளுக்கு இடு பொருட்கள் வழங்கப்பட்டன.