/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மலைப்பகுதியில் தீ தடுப்பு ஒத்திகை
/
மலைப்பகுதியில் தீ தடுப்பு ஒத்திகை
ADDED : மே 01, 2025 01:11 AM
பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி அருகே, மலைப்பகுதியில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கவுண்டம்பட்டி ஊராட்சி தோழனுாரிலுள்ள மலை அடிவாரத்தில், தீ விபத்து ஏற்பட்டால், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து, அப்பகுதி பொதுமக்களுக்கு செயல்முறை விளக்க பயிற்சி நடந்தது. பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பூபதி தலைமையில் பயிற்சி நடந்தது.
இதில் பொது இடங்கள், மலை பகுதிகளிலுள்ள இடங்களில் தீ விபத்து ஏற்பட்டால், பதற்றம் அடையாமல் அருகிலுள்ள மணல், தண்ணீர் மற்றும் தீ அணைப்பான் கருவியை பயன்படுத்தி தீயை அணைத்தல், தீ விபத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டு, முதலுதவி செய்தல், தீயணைப்பு உபகரணங்கள் பராமரித்தல் குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
மேலும், தீ விபத்து குறித்து, தீயணைப்பு துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப் பட்டது.தீயை எவ்வாறு அணைப்பது என்பது குறித்து, பொதுமக்களுக்கு பயிற்சி அளித்தனர்.
இதில், தோழனுாரிலுள்ள பொதுமக்கள் கலந்து கொண்டனர்.