/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வடகிழக்கு பருவமழை மீட்பு பணி தீயணைப்பு துறையினர் ஒத்திகை
/
வடகிழக்கு பருவமழை மீட்பு பணி தீயணைப்பு துறையினர் ஒத்திகை
வடகிழக்கு பருவமழை மீட்பு பணி தீயணைப்பு துறையினர் ஒத்திகை
வடகிழக்கு பருவமழை மீட்பு பணி தீயணைப்பு துறையினர் ஒத்திகை
ADDED : அக் 14, 2025 02:32 AM
தர்மபுரி, அவடகிழக்கு பருவமழை சமயத்தில், மீட்பு பணிகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி, தர்மபுரி, தீயணைப்பு துறை சார்பில், தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு, தர்மபுரி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் மாவட்ட அலுவலர் அம்பிகா தலைமை வகித்தார். மாவட்ட கலெக்டர் சதீஸ் முன்னிலை வகித்தார்.
வடகிழக்கு பருவமழை மற்றும் பேரிடர் மீட்பு குறித்த ஒத்திகையில், மழை மற்றும் பேரிடர் காலத்தில், நீர்நிலைகள், இடிபாடுகளில் சிக்கும் மனிதர்கள் மற்றும் விலங்குகளை மீட்பது குறித்து, தீயணைப்பு துறை வீரர்கள் செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். இதில், ஏணிகள் முலம் மீட்பது, மோட்டார் படகு, ரெஸ்கியூ டியூப், ரெஸ்கியூ துரோ பேக் உள்ளிட்டவை மூலம் மீட்பது குறித்து, செயல்விளக்கம் செய்து காண்பித்தனர்.இதில், பொதுமக்கள், கலெக்டர் அலுவலக அலுவலர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் கலந்து கொண்டனர்.