/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சனத்குமார் ஆற்றை துாய்மை செய்ய வி.எச்.பி., சார்பில் கோரிக்கை மனு
/
சனத்குமார் ஆற்றை துாய்மை செய்ய வி.எச்.பி., சார்பில் கோரிக்கை மனு
சனத்குமார் ஆற்றை துாய்மை செய்ய வி.எச்.பி., சார்பில் கோரிக்கை மனு
சனத்குமார் ஆற்றை துாய்மை செய்ய வி.எச்.பி., சார்பில் கோரிக்கை மனு
ADDED : அக் 14, 2025 02:32 AM
தர்மபுரி, தர்மபுரியில் உள்ள சனத்குமார் ஆற்றில் கொட்டப்படும் கழிவுகளை தடுத்து, ஆற்றை முழுமையாக துாய்மை செய்ய, வி.எச்.பி., மாவட்ட செயலாளர் கணேசன் தலைமையில், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
தர்மபுரி மாவட்டத்தில், தென்பெண்ணை ஆற்றில் முக்கிய கிளை நதியாக சனத்குமார் ஆறு உள்ளது. வத்தல்மலை நீர்பிடிப்பு பகுதியான அப்பனஹள்ளி கோம்பை, லளிகம், மிட்டா ரெட்டிஹள்ளி, ஏமக்குடியூர், இலக்கியம்பட்டி, அன்னசாகரம், சோழவராயன், ஒட்டப்பட்டி, நுலஹள்ளி, மதிகோன்பாளையம், செட்டி கரை ஆகிய ஏரிகள் வழியாக பாய்ந்தோடுவதால், ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பயனடைகிறது. இந்த ஆறு தர்மபுரி மாவட்டத்தில், 40 கி.மீ.,க்கு மேல் பயணித்து கம்பைநல்லுார் அருகே தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது.
இவ்வாறு, 35க்கும் மேற்பட்ட ஏரிகள் பயனடையும் ஆற்றில், கோழி கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி அசுத்தப்படுத்தி வருகின்றனர். மேலும், ஆற்று பகுதியில் முட்புதர்கள் மண்டி, ஆற்றில் தண்ணீர் செல்ல ஏற்றத்தக்கதாக இல்லாமல் உள்ளது. எனவே, சனத்குமார் ஆற்றில் கொட்டப்படும் கழிவுகளை தடுக்க, சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆற்றிலுள்ள முட்புதர்களை அகற்றி, தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவித்திருந்தனர்.