ADDED : நவ 06, 2026 02:02 AM
அ நிறம் | அளவு
அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூரில், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில், 'விபத்தில்லா தீபாவளி' கொண்டாடுவது குறித்து, விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
இதையொட்டி, தீயணைப்பு வீரர்கள் பி.டி.ஓ., அலுவலகம் எதிரில், கச்சேரிமேடு, திரு.வி.க., நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீயணைப்பு வாகனத்துடன் சென்று வியாபாரிகள், பொதுமக்கள், பயணிகளுக்கு பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது, தீத்தடுப்பு, தீ பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு முறைகள் குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
