/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கோட்டப்பட்டி வனத்தில் காட்டுத்தீ; அணைக்க முடியாமல் திணறல்
/
கோட்டப்பட்டி வனத்தில் காட்டுத்தீ; அணைக்க முடியாமல் திணறல்
கோட்டப்பட்டி வனத்தில் காட்டுத்தீ; அணைக்க முடியாமல் திணறல்
கோட்டப்பட்டி வனத்தில் காட்டுத்தீ; அணைக்க முடியாமல் திணறல்
ADDED : ஏப் 08, 2024 07:19 AM
அரூர் : அரூர் அடுத்த கோட்டப்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சூரநத்தம் பகுதியில், நேற்று காலை காட்டுத்தீ பற்றியது.
தொடர்ந்து தீ மளமளவென பரவியது. அரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் காமராஜ் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடம் சென்றனர். மேலும் கோட்டப்பட்டி வனத்துறையினரும் தீயணைப்புத்துறையினருடன் இணைந்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.இருந்த போதிலும், கடும் வெப்பத்தால் புல் மற்றும் இதர தாவரங்கள் கருகியதால், தீ வேகமாக பரவியது. இதனால், தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் திணறினர். தீயில் பல ஏக்கரில் இருந்த மூங்கில்கள், அரிய வகை மரங்கள், செடிகள் எரிந்து கருகி வருகின்றன. மேலும் வனவிலங்குகளும் பாதிப்படைந்து இடம்பெயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.