வனங்களில் கொட்டப்படும் குப்பை கண்டு கொள்ளாத வனத்துறையினர்
வனங்களில் கொட்டப்படும் குப்பை கண்டு கொள்ளாத வனத்துறையினர்
UPDATED : அக் 17, 2026 05:18 AM
ADDED : அக் 17, 2026 04:37 AM

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் நான்குரோட்டில் இருந்து, கடத்துார் செல்லும் சாலையில், அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு வரும், குடிமகன்கள் மது வாங்கிக் கொண்டு அருகே உள்ள வனப்பகுதிக்கு சென்று, மது அருந்துகின்றனர்.
பின், அங்கேயே பாட்டில், பிளாஸ்டிக் டம்ளர், தண்ணீர் பாக்கெட், பாலிதீன் பை உள்ளிட்டவைகளை வீசி செல்வதால், பிளாஸ்டிக் குப்பை குவிந்துள்ளது. மேலும், அரூர் நகரிலுள்ள இறைச்சி கடைகளில் இருந்து, சாக்கு பைகளில் கொண்டு வரப்படும் கோழிக்கழிவுகள் உள்ளிட்டவை கொட்டப்படுவதால், துர்நாற்றம் வீசுகிறது. வனப்பகுதியில் குப்பை கொட்டுவதை, வனத்துறையினர் கண்டுகொள்வதில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர்.அரூர் வனப்பகுதியில், குப்பை கொட்டுவோர் மீது, வனத்துறை நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. இதை பயன்படுத்தி, நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பிளாஸ்டிக் குப்பை, மருத்துவ கழிவு, துணி வகைகள், இறைச்சி கழிவுகள் என, அனைத்து வகை குப்பையை மூட்டையாக கட்டி கொண்டு வந்து கொட்டி செல்கின்றனர். மேலும், வனத்திலுள்ள குட்டைகளுக்கு தண்ணீர் செல்லும் நீர்வரத்து கால்வாய்களிலும் கொட்டப்படுகிறது.
வனப்பகுதியில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் குப்பையை, மான் உள்ளிட்ட விலங்குகள் சாப்பிட்டு, இறக்கும் அபாயம் உள்ளது.
