/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வங்கி கடன் பெற்று தருவதாக ரூ.1.22 லட்சம் மோசடி
/
வங்கி கடன் பெற்று தருவதாக ரூ.1.22 லட்சம் மோசடி
ADDED : ஜன 09, 2025 08:06 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி தாலுகா, மெனசி அடுத்த விழுதிப்பட்டியை சேர்ந்த விவசாயி மழலை அரசு, 38. இவரது நண்பர் சேகர், 45. இருவருக்கும் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த, மரக்காளாம்பட்டியை சேர்ந்த வீரபெருமாள், 42, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.வீரபெருமாள் நிலவள வங்கியில் மானியக்கடன் பெற்று தருவ-தாக கூறி, இருவரிடமும், 1.22 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு, வங்கி கடன் பெற்று தராமல் தாமதம் செய்து வந்தார்.
கடந்த, 7 அன்று வங்கியில் மானியக்கடன் பெற்று தருவதாக கூறி, இருவ-ரையும் தர்மபுரிக்கு வரவழைத்து, தனியார் வங்கி காசோலையை கொடுத்து விட்டு சென்றார்.சம்மந்தபட்ட தனியார் வங்கியில் விசாரித்தில், வீரபெருமாள் கொடுத்த காசோலை போலியானது என தெரியவந்தது. இதில், மழலை அரசு மற்றும் சேகர் புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார் வீரபெருமாளை கைது செய்தனர்.