/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
/
மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
ADDED : டிச 24, 2025 07:56 AM

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த ஜம்மணஹள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில், விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் மாணவ, மாணவியருக்கு சைக்கிள்களை வழங்கினார்.
* தர்மபுரி மாவட்டம், முத்தம்பட்டி அரசு மேல்நிலைப் பள்-ளியில், விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசாமி தலைமை வகித்தார். பாப்-பிரெட்டிப்பட்டி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தசாமி பிளஸ் 1 படிக்கும், 144 மாணவ மாணவியர்களுக்கு சைக்கிள் களை வழங்கினார். இதில், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய செய-லாளர் விஸ்வநாதன், நகர செயலாளர் தென்னரசு, முன்னாள் கவுன்சிலர் தாய் செல்வம், முன்னாள் சுகர் மில் துணைத் தலைவர் மகாலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

