ADDED : ஆக 03, 2026 01:50 AM

அ நிறம் | அளவு
தர்மபுரி: அதியமான்கோட்டை போலீஸ் எஸ்.எஸ்.ஐ., நாகராஜன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் லளிகம் பொன்னியம்மன் கோவில் அருகே ரோந்து சென்றனர்.
அப்போது கோவிலுக்கு பின்புறம் சிலர் அமர்ந்து, பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிந்-தது. இதையடுத்து அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள், லளிகத்தை சேர்ந்த மணிகண்டன், 27, முருகேசன், 38, அரவிந்தன் என தெரிந்தது. மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, சீட்டுக்கட்டு மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.
