/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மலை தேனீக்கள் கொட்டி ஆடு மேய்ப்பவர் பலி
/
மலை தேனீக்கள் கொட்டி ஆடு மேய்ப்பவர் பலி
ADDED : ஏப் 29, 2025 01:34 AM
பென்னாகரம்,:
தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே உள்ள மலையூர் கிராமத்தை சேர்ந்தவர் சென்றாயன். இவரது மகன் சஞ்சீவமூர்த்தி, 35. இவர், ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் பென்னாகரம் அடுத்த கோடுப்பட்டி சின்னாறு வனப்பகுதியில் தன் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு கூட்டமாக வந்த மலைத்தேனீக்கள் சஞ்சீவமூர்த்தியை கொட்டின. இதனால், மயக்க நிலைக்கு சென்ற அவர், தன் உறவினர்களுக்கு மொபைல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்த உறவினர்கள் அவரை மீட்டு பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பென்னாகரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.