/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
காணொலியில் அரசு ஐ.டி.ஐ., முதல்வர் திறப்பு
/
காணொலியில் அரசு ஐ.டி.ஐ., முதல்வர் திறப்பு
ADDED : ஆக 26, 2025 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரிமங்கலம், தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே கொள்ளுபட்டியில், அரசு தொழிற்பயிற்சி மையத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி மூலமாக துவக்கி வைத்தார். தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் சதீஷ், முன்னாள் அமைச்சர் பழனியப்பன், பேரூராட்சி சேர்மன் மனோகரன், துணை சேர்மன் சீனிவாசன், பயிற்சி நிலைய முதல்வர் சந்திரா ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
விழாவில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், கண்ணபெருமாள், பி.டி.ஓ., சர்வோத்தமன், தாசில்தார் மனோகரன், முன்னாள் பஞ்., தலைவர் கவுரிதிருகுமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.