/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
4 வழித்தட நீட்டிப்பில் அரசு டவுன் பஸ் சேவை
/
4 வழித்தட நீட்டிப்பில் அரசு டவுன் பஸ் சேவை
ADDED : ஜூலை 10, 2025 01:05 AM
தர்மபுரி, தர்மபுரி புறநகர் பஸ் ஸ்டாண்டில் நேற்று, மாவட்ட கலெக்டர் சதீஸ் முன்னிலையில், தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., மணி, 4 வழித்தட நீட்டிப்பு செய்யப்பட்ட அரசு டவுன் பஸ் சேவை மற்றும், 7 புதிய பஸ் சேவையை தொடங்கி வைத்தார். இதன் மூலம், 10 கிராமங்களில், 11,050 பேர் பயன்பெற உள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த, 4 ஆண்டுகளில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், 6 புதிய வழித்தடங்கள் மற்றும், 101 வழித்தட நீட்டிப்பு என, 107 மொத்த வழித்தடங்களில், 127 பஸ்கள் மூலம், 286 நகரம் மற்றும் கிராமங்களில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் என, 2.72 லட்சம் பேர் பயனடைகின்றனர். பழைய புறநகர் பஸ்களுக்கு மாற்றாக, 31 புதிய பஸ்கள், 45 புனரமைக்கபட்டவை என, 76 பஸ்களும், மகளிர் பயணத்தில் பழைய பஸ்களுக்கு மாற்றாக, 20 புதிய பஸ்களும், 15 புனரமைக்கப்பட்டவை என, 35 பஸ்களும் இயக்கப்படுகின்றன.
நிகழ்ச்சியில், பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன், நகராட்சி சேர்மன் லட்சுமி, தர்மபுரி போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர் செல்வம் மற்றும் துணை மேலாளர்கள், அலுவலர்கள் உடனிருந்தனர்.