/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கிரிப்' இல்லாத சாலையை சுரண்டும் பணி தீவிரம்
/
கிரிப்' இல்லாத சாலையை சுரண்டும் பணி தீவிரம்
ADDED : அக் 17, 2024 01:30 AM
கிரிப்' இல்லாத சாலையை சுரண்டும் பணி தீவிரம்
தர்மபுரி, அக். 17-
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே, கோடியூர் பகுதியில் நேற்று முன்தினம், அரசு பஸ் ஒன்று, மழையின் போது, முன்னால் சென்ற அரசு டவுன் பஸ் மீது மோதாமல் இருக்க, திடீர் பிரேக் போட்டபோது, சாலையில் பிடிமானம் (கிரிப்) கிடைக்காமல், கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பஸ்சில் பயணம் செய்த, 20 பேர் காயமடைந்தனர். முதல்கட்ட விசாரணையில், விபத்திற்கு காரணம் சாலையில் பிடிமானம் இல்லாதது தான் என கண்டறியப்பட்டது. அதை தொடர்ந்து, விபத்து நடந்த சாலையில், வாகனங்களின், பிடிமானத்திற்காக, பொக்லைன் இயந்திரம் மூலம், சாலையை சுரண்டி விடும் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து, பாலக்கோடு நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ரஞ்சித் கூறுகையில், ''விபத்து ஏற்பட்ட மாலுார் - அதியமான்கோட்டை தேசிய நெடுஞ்சாலை
என்.எச்., 17, கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதில், என்.எச்., 844 தேசிய நெடுஞ்சாலை பணிகள் இன்னும், 2 மாதங்களில் முடிவடைந்தவுடன், எஸ்.எச்., 17, சாலை, மாநில நெடுஞ்சாலை கட்டுப்பாட்டுக்கு வந்துவிடும். அப்போது, சாலை சீரமைப்பு குறித்து முடிவெடுக்கபடும். இந்நிலையில், முதல்கட்ட நடவடிக்கையாக, பாலக்கோடு முதல் வெள்ளிச்சந்தை வரை, 2 கி.மீ., அளவிற்கு சாலை பிடிமானத்தை அதிகரிக்க, பொக்லைன் மூலம், சுரண்டிவிடும் பணியை, கிருஷ்ணகிரி தேசியநெடுஞ்சாலை துறை ஆணையம் செய்து வருகிறது,'' என்றார்.

