/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
காரில் கடத்திய ரூ.2 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்; ஒருவர் கைது
/
காரில் கடத்திய ரூ.2 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்; ஒருவர் கைது
காரில் கடத்திய ரூ.2 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்; ஒருவர் கைது
காரில் கடத்திய ரூ.2 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்; ஒருவர் கைது
ADDED : ஜூன் 14, 2025 06:58 AM
காரிமங்கலம்: காரிமங்கலம் அருகே, கும்பாரஹள்ளி சோதனைச்சாவடி வழி-யாக, காரில் கடத்திய, இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான, 306 கிலோ குட்கா பொருட்களை போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் வழியாக, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக, போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று அதிகாலை காரிமங்கலம் அடுத்துள்ள, கும்பாரஹள்ளி சோத-னைச்சாவடியில் காரிமங்கலம் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் எஸ்.ஐ.,-க்கள் சுந்தரமூர்த்தி, ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த சுசூகி காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான, 306 கிலோ அளவிலான குட்கா புகையிலை பொருட்கள் கடத்தி வந்-தது தெரியவந்தது. இதையடுத்து கார் மற்றும் குட்கா பொருட்-களை பறிமுதல் செய்து, காரை ஓட்டி வந்த குஜராத் மாநிலத்தை சேர்ந்த கணேசபாய் ரப்பாரி, 25, என்பவரை கைது செய்து, நீதி-மன்றத்தில் ஆஜர்படுத்தி, தர்மபுரி மாவட்ட சிறையில் அடைத்-தனர்.