/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை
/
தர்மபுரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை
ADDED : டிச 03, 2024 07:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: வங்கக்கடலில் உருவான 'பெஞ்சல்' புயல் கரையை கடந்தபின், அதன் தாக்கத்தால் கடந்த, 2 நாட்களாக, தர்மபுரி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. நேற்று முன்தினம் மற்றும் நேற்று இரவு, 10:00 மணிக்கு மேல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்பதால், சென்னை வானிலை ஆய்வு மையம், தர்மபுரி மாவட்டத்திற்கு, ரெட் அலர்ட் அறிவித்திருந்தது. இதில், நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக, அரூரில், 331 மி.மீ.,
மழை பதிவானது. பாப்பிரெட்டிட்டி, 198, பென்னாகரம், 113, ஒகேனக்கல், 85,
பாலக்கோடு, 80.40, தர்மபுரி, 75.50, மாரண்டஹள்ளி, 62, மொரப்பூர் 37, என,
மாவட்டத்தில் சராசரியாக, 109.10 மி.மீ., மழை பதிவானது.