ADDED : மார் 07, 2024 06:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி : தர்மபுரி சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று காலை கடுமையான பனிப்பொழிவு நிலவியது.
தர்மபுரி மாவட்டத்தில், இந்தாண்டு மார்கழி மாதத்தில் இருந்து குறைவான பனிபொழிவு நிலவியது. ஒருசில நாட்களில் மட்டும் அதிகளவில் மூடுபனி இருந்தது. நேற்று, தர்மபுரி, தடங்கம், ஒடசல்பட்டி, பொம்மிடி, உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலையில் தொடங்கி காலை, 8:00 மணி வரை கடுமையான பனிபொழிவு காணப்பட்டது. இதனால், சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், வாகன ஓட்டிகள் வாகனத்தை குறைந்த வேகத்தில் இயக்கினர். மேலும், முன்னாள் செல்லும் வாகனங்கள் தெரியாததால், வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.

