/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
இந்து முன்னணி பொதுக்குழு கூட்டம்
/
இந்து முன்னணி பொதுக்குழு கூட்டம்
ADDED : மே 26, 2025 05:39 AM
பாலக்கோடு: பாலக்கோடு மந்தைவெளியில் இந்து முன்னணி ஒன்றிய பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் வேடி-யப்பன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன், துணை செயலாளர் ரவி, மாவட்ட அமைப்பாளர் வசந்த் முன்-னிலை வகித்தனர்.
கூட்டத்தில், வரும், ஜூன், 22ல் மதுரையில் நடக்கவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுதல், பாலக்கோடு ஒன்றி-யத்தில் புனரமைக்கப்படாமல் உள்ள கோவில்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தல், நீண்ட காலமாக கும்பாபிஷேகம் நடக்காமல் உள்ள கோவில்களை கண்டறிந்து, கும்பாபிஷேகம் நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்-ளுதல், கோவில்களில் பக்தர்களுக்கு கழிப்பறை, குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்-மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், நிர்வாகிகள், தொண்-டர்கள் கலந்து கொண்டனர்.