ADDED : நவ 03, 2025 03:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மொரப்பூர்: மொரப்பூரில் உள்ள தனியார் பள்ளியில், நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடந்தது. இதில், கலெக்டர் சதீஸ், 10 மருத்-துவ பயனாளி மாற்றுத்திறனாளி களுக்கு அடையாள அட்டை, 15
பழங்குடியின மக்களுக்கு பழங்குடியினர் நலவாரிய அடையாள அட்டை மற்றும், 20 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து
பெட்டகங்களை வழங்கினார்.
முகாமில், மாவட்ட சுகாதார அலுவலர் ராஜேந்திரன் தலைமையில், ஆட்டோக்களில் தீவிர எச்.ஐ.வி., விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லுாரி மாணவியர் எச்.ஐ.வி., விழிப்புணர்வு குறித்து விழிப்புணர்வு நடனம் மற்றும் நாடகம் நடத்தினர். கல்-லுாரி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி, நிர்வாக அலுவலர் ஜோதிபாசு மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

