/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வாக்காளர் சிறப்பு திருத்தம் அரசியல் கட்சியினருக்கு பயிற்சி
/
வாக்காளர் சிறப்பு திருத்தம் அரசியல் கட்சியினருக்கு பயிற்சி
வாக்காளர் சிறப்பு திருத்தம் அரசியல் கட்சியினருக்கு பயிற்சி
வாக்காளர் சிறப்பு திருத்தம் அரசியல் கட்சியினருக்கு பயிற்சி
ADDED : நவ 03, 2025 03:10 AM
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியை சேர்ந்த, ஓட்டுச்சாவடி நிலை முகவர்களுக்கு பயிற்சி வகுப்பு, வாக்காளர் பதிவு அலு-வலர் கதிரேசன் தலைமையில், பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக்-கல்லுாரியில் நடந்தது.
இதில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்தும், வாக்கா-ளர்களுக்கு படிவங்கள் பூர்த்தி செய்ய அங்கீகரிக்கப்பட்ட அர-சியல் கட்சி ஓட்டுச்சாவடி நிலை முகவர்கள் உதவி செய்ய வேண்டும். இந்த சிறப்பு தீவிர திருத்தம் சம்பந்தமான, அரசியல் கட்சியினர் எழுப்பிய சந்தேகங்களுக்கு, வாக்காளர் பதிவு அலுவ-லர்கள் உரிய விளக்கம் அளித்தனர். இதில், 300க்கும் மேற்பட்ட அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி வகுப்பில் உதவி வாக்காளர் பதிவு அலுவலர், தாசில்தார் சின்னா, தேர்தல் துணை தாசில்தார் சுதேஸ்வரி, முதுநிலை ஆர்.ஐ., கார்த்திக் உள்ளிட்ட அலுவலர்கள் பயிற்சி அளித்தனர்.