/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் ரூ.26.82 லட்சம் காணிக்கை வசூல்
/
ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் ரூ.26.82 லட்சம் காணிக்கை வசூல்
ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் ரூ.26.82 லட்சம் காணிக்கை வசூல்
ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் ரூ.26.82 லட்சம் காணிக்கை வசூல்
ADDED : ஜன 29, 2025 07:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூர் மலை மீதுள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் வளாகத்தில், பக்தர்கள் காணிக்கை செலுத்த, 8 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.
இவை நிறைந்த நிலையில், கிருஷ்ணகிரி உதவி ஆணையர் ராமுவேல் முன்னிலையில் நேற்று திறக்கப்பட்டு, அதியமான் கல்லுாரி நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவியர் மற்றும் பக்தர்கள் மூலம் காணிக்கை எண்ணப்பட்டன. மொத்தம், 26.82 லட்சம் ரூபாய், 7 கிராம் தங்கம், 183 கிராம் வெள்ளி இருந்தன. அவற்றை, வங்கி கணக்கில் ஹிந்து சமய அறநிலையத்துறை செலுத்தியது.