ADDED : ஜூன் 02, 2025 03:37 AM
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் பகுதியில் உள்ள மலைக்கிராமங்-களில், கள்ளத்தனமாக, நாட்டுத்துப்பாக்கிகளை தயார் செய்து, அதன் மூலம் தினமும் இரவில் காடுகளில், மான், காட்-டுப்பன்றி, முயல், காட்டெருமை ஆகியவற்றை வேட்டையாடும் சம்பவங்கள் நடந்து கொண்டே தான் உள்ளது.
மேலும் கள்ளக்காதல், நிலத்தகராறு ஆகியவற்றில் கள்ளத்துப்-பாக்கிகளால் சுடப்பட்டு இறந்தவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே வருகிறது. எனவே, அரூர் பகுதியிலுள்ள மலை கிராமங்களில் போலீஸ் மற்றும் வனத்துறையினர் இணைந்து திடீர் சோதனை நடத்தி நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இது குறித்த செய்தி, 'காலைக்கதிர்' நாளிதழில் கடந்த, 29ல் வெளியானது. இந்நிலையில் நேற்று அரூர் பகுதி மலைகிராமங்-களில் கள்ளத்துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பது சம்மந்தமாக வனத்துறையினருடன் இணைந்து, போலீசார் சோதனை மேற்-கொண்டனர். அப்போது, கலசப்பாடி நடுவளவு கிராமத்தில் வீட்டில் துப்பாக்கியை வைத்திருந்த சண்முகம், 45, என்பவரை கைது செய்த அரூர் போலீசார், அவரிடமிருந்து, 2 நாட்டுத்துப்-பாக்கிகளை பறிமுதல்
செய்தனர்.