நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர் : தர்மபுரி மாவட்டம், அரூரில், தனியார் மண்டிகளில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.
கடந்த நான்கு நாட்களுக்கு முன், ஒரு கிலோ தக்காளி, 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் முதல், 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல், பீர்க்கங்காய் ஒரு கிலோ, 70, அவரை, 120, வெள்ளரி, 50, வெண்டை, 40, புடலங்காய், 40; பாவக்காய், 90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வரத்து குறைவால், கடந்த, 3 நாட்களில், கிலோவிற்கு, 5 முதல், 10 ரூபாய் வரை காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.