/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கிடப்பில் 'சிசிடிவி' கேமரா பொருத்தும் பணி
/
கிடப்பில் 'சிசிடிவி' கேமரா பொருத்தும் பணி
ADDED : பிப் 16, 2024 10:00 AM
அரூர்: அரூரில் கிடப்பில் போடப்பட்டுள்ள, 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தும் பணியை விரைந்து முடிக்க வேண்டுமென, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து, பொதுமக்கள் கூறியதாவது:
தர்மபுரி மாவட்டம், அரூரில், முக்கிய சாலைகள், தெருக்கள், கடைவீதி உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில், டவுன் பஞ்., சார்பில், 42 லட்சம் ரூபாய் மதிப்பில், 100 இடங்களில், 125, 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தும் பணி கடந்த ஓராண்டுக்கு முன் துவங்கியது. சில மாதங்கள் மட்டும் பணிகள் நடந்த நிலையில், தற்போது கேமராக்கள் பொருத்தும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஏற்கனவே, அரூரில் பஸ் ஸ்டாண்ட், டாஸ்மாக் கடை, திருமண மண்டபம் உள்ளிட்ட இடங்களில், மொபைல் போன் திருட்டு, பணம் பறித்தல் உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் நடக்கிறது. மேலும், சிறுவர்கள் கஞ்சா போதைக்கு அதிகளவில் அடிமையாகி, குற்றச்செயல்களில் ஈடுபடும் சம்பவமும் நடக்கிறது.
இதுபோன்ற குற்றச்செயல்களை கட்டுப்படுத்தவும், குற்றவாளிகளை எளிதாக அடையாளம் காணவும், கிடப்பில் போடப்பட்டுள்ள, 'சிசிடிவி' கேமராக்களை பொருத்தும் பணியை, விரைவு படுத்தி, தரமான கேமராக்களை பொருத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.