ADDED : செப் 09, 2025 02:33 AM
பென்னாகரம், பென்னாகரம் அடுத்த சின்னப்பள்ளத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சர்வதேச எழுத்தறிவு தினம் தலைமை ஆசிரியர் பழனி தலைமையில் நேற்று நடந்தது. இதில், கல்வி ஓர் ஆயுதம் என்பதனை அனைவரும் உணர வேண்டும். அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் மூலமாக, 14 வயதுக்கு மேற்பட்டவர்கள் எழுத படிக்க தெரியாமல் இருந்தால் அவர்களுக்கு எண்ணறிவும், எழுத்தறிவும் கற்று கொடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் படிக்கும் காலத்தில் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் இருப்பவர்களுக்கு அவர்களின் பெயரை எழுதும் அளவிற்கு பயிற்சிகள் கொடுப்பது நல்லது.
'கல்லாமையை இல்லாமல் ஆக்குவோம்' என்பதை அனைவரும் இந்த தினத்தில் உறுதிமொழியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் வளர்மதி, பழனிச்செல்வி, கல்பனா, திலகவதி, கலைச்செல்வி, அனுபிரியா, அம்பிகா மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.