/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கம்பைநல்லுார் ஸ்ரீராம் பப்ளிக் பள்ளி துப்பாக்கி சுடும் போட்டியில் சாதனை

ADDED : ஜூன் 23, 2025 05:30 AM
அரூர்: 'சினெர்ஜி ஷாட் ஏர்கன் ஷூட்டிங் அசோசியேஷன் ஆப் இந்-தியா' என்ற அமைப்பால் நடத்தப்பட்ட
சர்வதேச மற்றும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி, பஞ்சாபிலுள்ள பாட்டியாலா என்ற இடத்தில் நடந்தது.
இதில் கலந்து கொண்ட தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார், ஸ்ரீராம் பப்ளிக் பள்ளி மாணவர்கள் 12 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில், மாணவி ஹரிஷ்மிதா தங்கப்பதக்கம் பெற்று முதலிடம் பெற்றார்.
16 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் மாணவர் சாய்கவி பிர-சன்னா வெண்கலப்பதக்கம் பெற்றார். 12 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் கலந்து கொண்ட மாணவர் கவின் வெண்கலப்-பதக்கம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தார்.
பரிசு பெற்ற மாணவர்களுக்கு, ஸ்ரீராம் கல்வி நிறுவனங்களின் நிறு-வனர் வேடியப்பன், தாளாளர் சாந்தி வேடியப்பன், பள்ளி இயக்குனர்கள் தமிழ்மணி, பவானி தமிழ்மணி, முதல்வர் வெற்-றிவேல் செல்வம், பயிற்சி ஆசிரியர் மற்றும் சக
ஆசிரியர்கள் பாராட்டினர்.