/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சென்றாய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
/
சென்றாய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : செப் 09, 2024 07:03 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த, லளிகத்திலுள்ள, ஸ்ரீதேவி பூதேவி சமேத சென்றாய பெருமாள் சுவாமி கோவில் கும்பிஷேக விழா கடந்த, 6- அன்று துவங்கியது. நேற்று காலை யாகசாலையில் இருந்து, தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக கொண்டு சென்று, கோபுர கலசங்கள் மற்றும் மூலவர் தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் அலங்கார சேவை, மஹா தீபாரதனை நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில், பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், கருட வாகனத்தில் திருவீதி உலா உள்ளிட்டவை நடந்தன. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.