/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அதியமான்கோட்டை காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
/
அதியமான்கோட்டை காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : மார் 17, 2025 03:33 AM
அதியமான்கோட்டை: அதியமான்கோட்டையில், சுயம்பு காளியம்மன் கோவில் உள்-ளது. இக்கோவிலில், 12 ஆண்டுக்கு பின், கும்பாபிஷேக விழா-விற்காக, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த, 14- அன்று கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.
மூலவர் விக்ரகங்கள் பிர-திஷ்டை செய்து, அஷ்டபந்தனம் சாற்றும் நிகழ்ச்சி நடந்தது.நேற்று காலை யாகசாலையில் நான்கு கால பூஜைகள் முடிந்து, தீர்த்தக்குடம் ஊர்வலமாக கொண்டு சென்று, காலை, 10:30 மணிக்கு காளியம்மன் கோவில் விமான கோபுர கலசங்கள் மற்றும் மூலவர் தெய்வங்களுக்கு புனிதநீரை ஊற்றினர்.
பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் அலங்-கார சேவை, மகா தீபாராதனை நடந்தது.
இதில், காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்-கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை விழாக்குழுவினர், மற்றும் பக்தர்கள் செய்திருந்-தனர்.