ADDED : ஆக 21, 2026 01:23 AM
பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துாரிலுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் வட்ட செயல்முறை கிடங்கில், 20க்கும் மேற்பட்ட சுமை துாக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கிருந்து, 130 ரேஷன் கடைகள், 100க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளுக்கு உணவு பொருட்கள் அனுப்பப்படுகிறது. ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமை துாக்கும் தொழிலாளர்
கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கிடங்கிற்கு லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்ட பொருட்கள் இறக்கப்படாமல், 4 நாட்களாக அப்
படியே நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொழிலாளர்கள் கூறியதாவது:தொழிலாளர்கள் சங்க அங்கீகார தேர்தல் நடத்த வேண்டும். தொழிலாளர்கள் வருகை பதிவேட்டில், 4 ஆண்டுகளாக பணி-யாற்றி வருவோரின் பெயர்களை சேர்க்க வேண்டும். சிவப்பு அட்-டைக்கு பதில், பச்சை அட்டை வழங்க வேண்டும். நிலுவையி-லுள்ள, 60 சதவீத கூலி உயர்வை வழங்க வேண்டும் என்பன, உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம். ஆனால் கோரிக்கைகள் தொடர்பாக அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்-தப்படும் என, அளிக்கப்பட்ட உறுதிமொழி நிறைவேற்றப்படா-ததால், தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறோம். இதனால் ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் அனுப்பும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
