/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு லட்டு தயாரிக்கும் பணி மும்முரம்
/
சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு லட்டு தயாரிக்கும் பணி மும்முரம்
சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு லட்டு தயாரிக்கும் பணி மும்முரம்
சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு லட்டு தயாரிக்கும் பணி மும்முரம்
ADDED : டிச 27, 2025 05:48 AM

தர்மபுரி: தர்மபுரி, கோட்டை பரவாசுதேவ சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு, லட்டு தயாரிக்கும் பணியில் பிரசாத குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
தர்மபுரியில், பிரசித்தி பெற்ற பரவாசுதேவ சுவாமி கோவில் உள்ளது. இங்கு நடப்பாண்டில் வைகுண்ட ஏகாதசி உற்சவம், கடந்த, 20ல் பகல்-பத்து உற்சவத்துடன் தொடங்கி, 10 நாட்கள் பெரு-மாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்து வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வாக, டிச., 30 செவ்-வாய்க்கிழமை அதிகாலை, 5:00 மணிக்கு சொர்க்க-வாசல் திறப்பு வழிபாடு நடக்கவுள்ளது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய உள்ளனர்.
சொர்க்கவாசல் திறப்பு வழிபாட்டில், பக்தர்க-ளுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படும். அதற்காக, லட்டு தயாரிப்பு குழுவினர் சார்பில், 75,000 லட்-டுகள் தயாரிக்கும் பணி கோவில் வளாகத்தில் நடந்து வருகிறது.
சர்க்கரை, கடலை பருப்பு, நெய், முந்திரி, திராட்சை, ஏலக்காய், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் கொண்டு லட்டுகள் தயார் செய்யும் பணியில் சமையல் கலைஞர்கள் ஈடுபட்டுள்-ளனர். வைகுண்ட ஏகாதசி அன்று பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.

