ADDED : ஜூலை 02, 2025 02:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்கோடு, பாலக்கோடு அருகே, குடியிருப்புக்குள் சிறுத்தை புகுந்து, நாய், ஆடு, கோழிகளை வேட்டையாடி வருகிறது. பாலக்கோடு வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை, 'ட்ரோன்' கேமரா மூலமும் தேடி வருகின்றனர்.
மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் உத்தரவின் படி, பாலக்கோடு வனச்சரக அலுவலர் கார்த்திகேயன் தலைமையில், வன ஊழியர்கள், சிறுத்தையை தேடி வருகின்றனர்.
வனத்தை ஒட்டிய கிராமங்களில், மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், இரவில் வெளியே வரக்கூடாது எனவும், செல்ல பிராணிகள், கால்நடைகளை கூண்டில் அடைத்து வைக்கவும் எச்சரித்துள்ளனர்.