/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
எல்.ஐ.சி., முகவர்கள் ஆர்ப்பாட்டம்
/
எல்.ஐ.சி., முகவர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 05, 2024 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள எல்.ஐ.சி., அலுவலகம் முன், அகில இந்திய எல்.ஐ.சி., முகவர்கள் சங்கம் (லிகாய்) சார்பில், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலம் கோட்ட தலைவர் முருகன்நாயனார் தலைமை வகித்தார். கிளை செயலாளர் கிருஷ்ணப்பா முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், எல்.ஐ.சி., முகவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். எல்.ஐ.சி., முகவர்களின் கமிஷனை பறிக்கக் கூடாது என வலியுறுத்தினர். நிர்வாகி கணேசன் நன்றி கூறினார்.