/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சீட்டு பணம் வசூலாகாததால் தீக்குளிக்க முயன்றவர் கைது
/
சீட்டு பணம் வசூலாகாததால் தீக்குளிக்க முயன்றவர் கைது
சீட்டு பணம் வசூலாகாததால் தீக்குளிக்க முயன்றவர் கைது
சீட்டு பணம் வசூலாகாததால் தீக்குளிக்க முயன்றவர் கைது
ADDED : ஆக 29, 2025 01:31 AM
மொரப்பூர், மொரப்பூர் அடுத்த பறையப்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தசாமி, 45, கூலித்தொழிலாளி; இவர், நேற்று காலை, 10:45 மணிக்கு மொரப்பூர் போலீஸ் ஸ்டேஷன் முன், பாட்டிலில் இருந்த பெட்ரோலை தலை யில் ஊற்ற முயன்றார். போலீசார் அவரது கையிலிருந்த பெட்ரோல் பாட்டிலை பிடுங்கி விசாரித்தனர்.
அதில், கோவிந்தசாமி மாதச்சீட்டு நடத்தி வந்ததும், சீட்டு எடுத்தவர்கள் பணம் கட்டாமல் ஏமாற்றி வந்ததால், சீட்டு எடுத்தவர்களுக்கு பணம் கொடுக்க முடியாமல் கோவிந்தசாமி தவித்துள்ளார். இந்நிலையில் சீட்டு பணம் கேட்டு அதே பகுதியை சேர்ந்த, 2 பேர் கோவிந்தசாமியின் டாடா ஏஸ் வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் அதை மீட்டு தரக்கோரி, தீக்குளிக்க முயன்றது தெரிய வந்தது. கோவிந்தசாமியை, போலீசார் கைது செய்தனர்