/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
முகமூடி திருடர்கள் 8 கடைகளில் கைவரிசை
/
முகமூடி திருடர்கள் 8 கடைகளில் கைவரிசை
ADDED : செப் 25, 2025 01:41 AM
கம்பைநல்லுார் :தர்மபுரி மாவட்டம், கடத்துாரை சேர்ந்தவர் பிரகாஷ். இவர், கம்பைநல்லுாரில் விஜயலட்சுமி என்ற பெயரில் பேக்கரி நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பேக்கரியை மூடி விட்டு சென்றுள்ளார். நேற்று காலை பேக்கரி பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது, 15,000 ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. மேலும், பேக்கரி அருகில் இருந்து துணிக்கடை மற்றும் கம்பைநல்லுார் போலீஸ் ஸ்டேஷன் எதிரில் இருந்த ராதா ஸ்டோர் உள்ளிட்ட, 8 இடங்களில் திருட்டு சம்பவம் நடத்துள்ளது.
இதனிடையே, முகமூடி மற்றும் ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த, 2 வாலிபர்கள் கோவில் பூட்டை உடைத்து, உண்டியலில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு செல்லும் 'சிசிடிவி' காட்சி வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை கொண்டு, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை, கம்பைநல்லுார் போலீசார் தேடி வருகின்றனர்.