/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
முதன்மை திட்டங்கள் பயிற்சி பட்டறை
/
முதன்மை திட்டங்கள் பயிற்சி பட்டறை
ADDED : ஆக 07, 2025 01:05 AM
தர்மபுரி, தர்மபுரி, பெரியார் பல்கலைக்கழக பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில், மத்திய அரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின், 'மை பாரத்' இணைந்து, 'முதன்மை திட்டங்கள் குறித்த பயிற்சி பட்டறை' நேற்று நடந்தது. மைய இயக்குனர்(பொ) செல்வபண்டியன் தலைமை வகித்தார்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தீபா, திறன் மேம்பாட்டு அலுவலர் சந்திரா, இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் கவுரி, தர்மபுரி தலைமை அஞ்சலகத்தின் மேற்பார்வையாளர் கீதா உட்பட பலர் கலந்து கொண்டு, துறை சார்ந்த திட்டங்கள், வழங்கப்படும் உதவி தொகைகள் மற்றும் மானியங்கள் குறித்து கூறினர். மைய ஆங்கில துறைத்தலைவர் கோவிந்தராஜ் மற்றும் 'மை பாரத்' தர்மபுரியின் தேசிய இளைஞர் தொண்டர்கள் மஞ்சுளா மற்றும் சுகன்யா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.