ADDED : நவ 01, 2025 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம் மாவட்டம், மல்லியகரை பகுதியை சேர்ந்தவர் மாயகிருஷ்ணன், மனைவி அமுதா, 24. இவர் இரண்டாவது முறையாக கர்ப்பமடைந்தார். பிரசவத்திற்காக, நேற்று முன்தினம் ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். பின்னர் உறவினர்கள் அமுதாவை, சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து அனுமதித்தனர். இந்நிலையில், நேற்று காலை அமுதாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அமுதாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், தொடர்ந்து அமுதாவிற்கு ரத்த போக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் சிகிச்சை அளித்தும் பலனின்றி அமுதா உயிரிழந்தார்.
இது குறித்து மல்லியகரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

