/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அமைச்சர் வருகை சென்டர் மீடியன் அகற்றம்
/
அமைச்சர் வருகை சென்டர் மீடியன் அகற்றம்
ADDED : நவ 13, 2025 03:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்ட, தி.மு.க., பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம், அரூரிலுள்ள என்.என்.மஹாலில், இன்று நடக்கிறது.
இதில், தி.மு.க., மண்டல பொறுப்பாளரும், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சருமான வேலு பேசுகிறார்.அவர் வருவதை அறிந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், அமைச்சரின் கார் சென்று வர வசதியாக, நேற்று அரூர் - சேலம் பைபாஸ் சாலையில், என்.என்., மஹால் முன்பு, சாலையிலுள்ள சென்டர் மீடியனை பொக்லைன் வாகனம் மூலம், அவசரகதியில் அகற்றி உள்ளனர்.

