தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/மொபைல் இ-சேவை மைய வாகன சேவை துவக்கம்

மொபைல் இ-சேவை மைய வாகன சேவை துவக்கம்

மொபைல் இ-சேவை மைய வாகன சேவை துவக்கம்


ADDED : நவ 08, 2026 03:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 08, 2026 03:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், தடங்கத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், இ-சேவா மைய விழிப்புணர்வு வாகன சேவை நேற்று தொடங்கப்பட்டது. முதன்மை மாவட்ட நீதிபதி சுதா நேற்று, மொபைல் இ-சேவா மைய விழிப்புணர்வு வாகன சேவையை தொடங்கி வைத்தார்.

இந்த வாகனம், நகரின் முக்கிய இடங்களில் சுற்றிவந்து பொதுமக்களுக்கு நீதித்துறை டிஜிட்டல் சேவைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது.இந்த மொபைல், இ-சேவா மைய வாகனத்தின் மூலம், பொதுமக்கள் நேரடியாக நீதிமன்றங்களுக்கு செல்லாமல், சிறு வழக்குகள் மற்றும் அபராத

வழக்குகளை சுமூகமாக முடித்துக் கொள்ள முடியும். சாட்சி விசாரணைகளை காணொலி காட்சி மூலம் பதிவு செய்ய முடியும். மின்னணு தாக்கல் மற்றும் வழக்கு விபரங்களை உடனடியாக அறிய முடியும்.

துவக்க விழாவில், நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள், வக்கீல்கள், சங்க உறுப்பினர்கள், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பிரதிநிதிகள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

மாவட்டத்தின் அனைத்து தாலுகா நீதிமன்ற எல்லைகளுக்கும் இந்த வாகனம் சென்று நீதித்துறை சேவைகளை வழங்க உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us