/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரி அரசு சட்ட கல்லுாரியில் மாதிரி நீதிமன்ற போட்டிகள்
/
தர்மபுரி அரசு சட்ட கல்லுாரியில் மாதிரி நீதிமன்ற போட்டிகள்
தர்மபுரி அரசு சட்ட கல்லுாரியில் மாதிரி நீதிமன்ற போட்டிகள்
தர்மபுரி அரசு சட்ட கல்லுாரியில் மாதிரி நீதிமன்ற போட்டிகள்
ADDED : ஆக 31, 2025 03:56 AM
தர்மபுரி:தர்மபுரி
அரசு சட்ட கல்லுாரியில், அரசு சட்ட கல்லுாரிகளுக்கிடையே, மாநில
அளவிலான, மாதிரி நீதிமன்ற போட்டிகள் நேற்று நடந்தது, இதில், வெற்றி
பெற்றவர்
களுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் சான்றிதழ்களை வழங்கினார்.
தர்மபுரி
அரசு சட்டக் கல்லுாரியில், தமிழகத்திலுள்ள அரசு சட்ட
கல்லுாரிகளுக்கு இடையே, மாதிரி நீதிமன்ற போட்டிகள் கடந்த, 28 அன்று
தொடங்கி மூன்று நாட்கள், 4 சுற்றுகளாக நடந்தது. இதில், 14 அரசு சட்ட
கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். தர்மபுரி அரசு சட்டக்
கல்லுாரி முதல்வர் உஷா வரவேற்றார். இதில், தமிழ்நாடு அரசு சட்ட கல்வி
இயக்குனர் விஜயலட்சுமி, தர்மபுரி மாவட்ட முதன்மை நீதிபதி திருமகள்
ஆகியோர் தலைமை வகித்து பேசினர்.
இறுதி போட்டியில், தர்மபுரி மாவட்ட
சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜா, முதன்மை சார்பு நீதிமன்ற நீதிபதி
ஞானபாலகிருஷ்ணன், கூடுதல் சார்பு நீதிபதி கலைவாணி, வக்கீல் அன்வர்
மற்றும் தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக பேராசிரியர்
ரஞ்சித் ஓமன் ஆப்ரஹாம் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். இறுதி
போட்டியில், சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்ட கல்லுாரி கோப்பையை
வென்றது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் வெற்றி பெற்ற
மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கினார். கல்லுாரி இணை
பேராசிரியர் சிவதாஸ் நன்றி கூறினார்.

