தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ குண்டும், குழியுமான சாலை வாகன ஓட்டிகள் அவதி

குண்டும், குழியுமான சாலை வாகன ஓட்டிகள் அவதி

குண்டும், குழியுமான சாலை வாகன ஓட்டிகள் அவதி


ADDED : ஜூலை 17, 2026 01:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 17, 2026 01:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் பஸ் ஸ்டாண்ட் பின்புறத்தில் இருந்து, அம்பேத்கர் நகர் வழியாக, தீர்த்தமலை இணைப்பு சாலைக்கு செல்லும் சிமென்ட் சாலை உள்ளது. இச்சாலை வழியாக, சங்கி-லிவாடி, செல்லம்பட்டி, கீழானுார், பொய்யப்பட்டி, மாவேரிப்-பட்டி, ஈட்டியம்பட்டி, மாம்பாடி, தீர்த்தமலை உள்ளிட்ட, 40க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாண-வர்கள் தினமும் சென்று வருகின்றனர்.

இச்சாலை சேதமடைந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுக-ளுக்கு முன் சீரமைக்கப்பட்டது. ஆனால், சாலை முறையாக சீர-மைக்கப்படாததால், ஒரு சில மாதங்களிலேயே மீண்டும், சேதம-டைந்து தற்போது, குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.

இதனால் பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவ, மாணவியர், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்-றனர். மேலும், சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால், இரவு நேரங்களில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். விளைபொருட்களை இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்ல முடியாமல், விவசாயிகள் சிரமப்படுகின்றனர். சாலையை சீரமைக்க கோரி, பலமுறை கோரிக்கை விடுத்தும், நக-ராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க மாவட்ட நிர்-வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us