/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சாலையோர குப்பைக்கு தீ வாகன ஓட்டிகள் அவதி
/
சாலையோர குப்பைக்கு தீ வாகன ஓட்டிகள் அவதி
ADDED : மார் 20, 2024 10:29 AM
காரிமங்கலம்: கோடை காலமான தற்போது, காரிமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மரங்களிலிருந்து இலைகள் காய்ந்து சாலையோரத்தில் குவிந்து கிடக்கிறது.
இவற்றை அகற்றாததால் சாலையில் செல்லும் சிலர், வீசிச்செல்லும் சிகரெட் துண்டுகளால், காய்ந்த சருகுகள் தீப்பற்றி எரிகிறது. இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மீது, நெருப்பு பொறி படுகிறது. நெருப்பால் ஏற்படும் புகை மண்டலம், வாகன ஓட்டிகளின் கண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது.
இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குப்பை மற்றும் இலை சருகுகளை அகற்றிட, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

