தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ஆக்கிரமிப்பை அகற்ற நகராட்சி நோட்டீஸ்

ஆக்கிரமிப்பை அகற்ற நகராட்சி நோட்டீஸ்

ஆக்கிரமிப்பை அகற்ற நகராட்சி நோட்டீஸ்


ADDED : நவ 18, 2026 05:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 18, 2026 05:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூரில், பஸ் ஸ்டாண்ட், கடைவீதி, மாரியம்மன் கோவில் தெரு, சந்தைமேடு, மஜீத்தெரு, திரு.வி.க., நகர், நான்குரோடு, கச்சேரிமேடு ஆகிய இடங்களில் சாலையை ஆக்கிரமிப்பு செய்து, கடைகளை நீட்டிப்பு செய்து, கழிவுநீர் கால்வாய்களை ஆக்கிரமித்து அடைத்துள்ளனர்.

மேலும், பஸ் ஸ்டாண்ட் மற்றும் அதன் முன்புறம், எதிர்ப்புறம் அமைந்துள்ள சாலைகள், நடைபாதைகளில் தள்ளுவண்டி கடைகள், பழக்கடைகள் மற்றும் இதர சிறு வியாபார கடைகள் அமைக்கப்பட்டு, பொது இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, சில கடை உரிமையாளர்கள் தங்களது கடைகளுக்கு முன்புறமுள்ள காலியிடங்களை தள்ளுவண்டி வியாபாரிகள், பழக்கடை வியாபாரிகள் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு உள்வாடகைக்கு வழங்கி, பொது இடங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால், அரூர் நகரில் தினமும், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மேலும், கழிவுநீர் கால்வாய் அடைப்பால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. நகராட்சி சார்பில் பலமுறை ஆக்கிரமிப்புகள் அகற்றிய போதிலும், மீண்டும், அதே இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது. ஆக்கிரமிப்பை அகற்ற, அரூர் பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், அரூர் நகராட்சி கமிஷனர் அமுதா (பொறுப்பு) உத்தரவின்படி, சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளுக்கு நேற்று நோட்டீஸ் வழங்கப்பட்டது.

அதில், நோட்டீஸ் பெற்ற, 24 மணி நேரத்திற்குள் தாங்கள் சாலையோர ஆக்கிரமிப்புகளை, தாங்களாக அகற்றி கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், நாளை, (நவ.19) நகராட்சி நிர்வாகம் சார்பில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றும், அதற்கான தொகை, சம்பந்தப்பட்ட கடை உரிமையாளரிடம் வசூலிக்கப்படும் எனவும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us