/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
முத்துமாரியம்மன், காளியம்மன் தேர் திருவிழா
/
முத்துமாரியம்மன், காளியம்மன் தேர் திருவிழா
ADDED : மே 04, 2025 01:14 AM
தர்மபுரி:தர்மபுரி அருகே, முத்துமாரியம்மன், காளியம்மன் கோவில் தேர் திருவிழா, நேற்று வெகு விமர்சையாக நடந்தது.தர்மபுரி அடுத்த, பள்ளக்கொல்லை முத்துமாரியம்மன், காளியம்மன் கோவில் திருவிழா கடந்த, 18ல் கரகம் எழுப்புதலுடன் தொடங்கியது. 27ல் வினாயகர் பூஜையுடன் தேர் திருவிழாவுக்கான கொடியேற்றம் நடந்தது.
29 மாலை, 3:00 மணிக்கு காளியம்மன், முத்துமாரியம்மனுக்கு கூழ் ஊற்றுதல், 30ல் மாவிளக்கு ஊர்வலம், கடந்த 1 ல் எண்ணைக்காப்பு இடுதல், சுவாமி திருகல்யாணம் நடந்தது. நேற்று முன்தினம் மாலை, 4:30 மணிக்கு சிறிய தேரோட்டம் நடந்தது. நேற்று மதியம், 12:00 மணிக்கு கங்கை பூஜை, தீ மிதித்தல் நடந்தது. அதனை தொடர்ந்து, மாலை, 3:00 மணிக்கு பெரிய தேரோட்டம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.