sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

செய்திகள் சில வரிகளில் ...

/

செய்திகள் சில வரிகளில் ...

செய்திகள் சில வரிகளில் ...

செய்திகள் சில வரிகளில் ...


ADDED : பிப் 05, 2024 11:03 AM

Google News

ADDED : பிப் 05, 2024 11:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வட்டார வள மைய ஆசிரியர்

பயிற்றுனர் பணிக்கு நியமன தேர்வு

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், தர்மபுரி மாவட்டத்தில், பட்டதாரி ஆசிரியர், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் பணிக்கான நேரடி நியமன தேர்வு நடந்தது. மாவட்டத்தில், 6 மையங்களில் இந்த தேர்வு நேற்று நடந்தது. இத்தேர்வு எழுத, 2,118 பணி நாடுனர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் நேற்று நடந்த தேர்வில், 2,061 பேர் மட்டும் தேர்வு எழுதினர், 57 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. தேர்வு பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் குமார், தர்மபுரி சி.இ.ஓ., ஜோதி சந்திரா ஆய்வு செய்தனர்.

பத்ரகாளியம்மன் கோவில்

மண்டல பூஜை நிறைவு விழா

நல்லம்பள்ளி அருகே, நார்த்தம்பட்டி பஞ்., உட்பட்ட, மத்தனம்பட்டியில், பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. கோவில் கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து, நாள்தோறும் மண்டல பூஜை நடந்தன. மண்டல பூஜை நிறைவை முன்னிட்டு, நேற்று யாகவேள்வி பூஜைகளும், பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை மற்றும் அலங்கார சேவை நடந்தது. இதில், 25 கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான

தேர்வில் 1,145 பேர் பங்கேற்பு

ஊராட்சி ஒன்றிய நடுநிலை, மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் காலி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று வேலையில்லாத, 1,192 பேர் இத்தேர்வெழுத விண்ணப்பித்தனர். கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் நடந்த, ஆங்கில ஆசிரியர்களுக்கான தேர்வில், 413 பேரும், மகளிர் மேல்நிலைப் பள்ளியில், கணிதம், தமிழ் ஆசிரியர்களுக்கான தேர்விற்கு விண்ணப்பித்த, 553 பேரில், 531 பேரும், புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் இயற்பியல், 55, வேதியியல், 57, தாவரவியல், 6, விலங்கியல், 9, வரலாறு, 71, புவியியல், 6 பேர் என விண்ணப்பித்திருந்த, 204 பேரில், 201 பேர் என மொத்தம், 1,192 பேரில், 1,145 பேர் தேர்வை எழுதினர்.

கிணறு வெட்டும்போது தொழிலாளி பலி

மொரப்பூர் அடுத்த முத்தானுாரை சேர்ந்தவர் சிவராமன், 40; பாலசமுத்திரத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரது நிலத்தில் கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் மதியம், 1:00 மணிக்கு கம்பரசர் மூலம் கிணற்றில் துளை போட்டுக் கொண்டிருந்தார். அப்போது, பக்கவாட்டிலிருந்த கல் சரிந்து அவரது தலையில் விழுந்தது. இதில், படுகாயமடைந்த சிவராமன் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். மொரப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

நார்த்தம்பட்டியில் குடிநீர் வினியோகம்

தடுக்கும் கும்பல் மீது போலீசில் புகார்

நார்த்தம்பட்டி பஞ்.,ல் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதை தடுத்து வரும் கும்பல் மீது நடவடிக்கை கோரி, நல்லம்பள்ளி பி.டி.ஓ., மற்றும் அதியமான்கோட்டை போலீசில், பஞ்., தலைவர் புகார் அளித்துள்ளார்.

புகார் மனுவில் பஞ்., தலைவர் கலைச்செல்வன் தெரிவித்துள்ளதாவது: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே, நார்த்தம்பட்டி பஞ்., உள்ளது. இங்கு, காந்திநகர் காலனி மற்றும் நார்த்தம்பட்டி மையப்பகுதி உட்பட, 2 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் மூலம் நாள்தோறும், 400-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு, பஞ்., நிர்வாகம் சார்பில் குடிநீர் வினியோகம் செய்து வருகிறோம். கடந்த சில நாட்களுக்கு முன், மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் குழாய்களில், கற்கள் வைத்து சிலர் அடைத்துள்ளனர். மேலும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு, நீர் ஏற்றும் மின் மோட்டார் ஒயர்களை தொடர்ந்து துண்டித்து வருவதால், பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் வழங்க முடியாத சூழல் நிலவி வருகிறது. எனவே, திட்டமிட்டு குடிநீர் வினியோகத்தை தடுக்கும், கும்பலை கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us